Sinhala (Sri Lanka)English (United Kingdom)

எங்களைப் பற்றி

பிரதேச செயலகம் - நானாட்டான்


தூரநோக்கு:

நானாட்டான் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்பாடடையச் செய்வதற்கு அவர்களின் பங்களிப்புடன் பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லல்.

குறிக்கோள்:

அரசினதும், பிரதேச மக்களினதும் எதிர்பார்ப்புகளுக்கமைய பயனுறுதிமிக்கதும்,  வினைத்திறனுடையதுமான  சேவைகளை, சிக்கனத்தன்மையோடும், விரைவாகவும், சமநிலையோடும் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்தி பிரதேச மட்ட திணைக்களங்கள் , நிறுவனங்களை ஒன்றிணைத்து வழிகாட்டல்.

இலக்குகள்:

  • பிரதனமாக அரசினது செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
  • சட்டரீதியாக வழங்கப்பட்ட பல்வேறுபட்ட பணிகளை அறிதல், சமூக, பொருளாதார அபிவிருத்திப்பணிகளை ஒன்றிணைத்தல், மேற்பார்வை   செய்தல், அமுல்படுத்தல்.
  • அமைச்சுக்களின் பிரதிநிதியாக செயற்படல்.
  • வருமானங்களை அறவீடு செய்தல்.
  • பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்;டுக்குட்பட்ட ஏனைய அபிவிருத்திப் புணிகளை அறிய செய்தல்.
  • மக்கள் சபையின் செயற்பாடுகளில் உதவுதல். வெளிநாட்டு உதவியுடனான திட்டங்களை அமுல்ப்படுத்தல்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமது பிரதேச செயலகம் பற்றி...

எமது பிரதேச செயலகம் மன்னார் நகரில் இருந்து தெற்கே 20கி.மீ தொலைவில் நானாட்டான் கிராமத்தில் அமைந்துள்ளது.


எமது செயலக பிரிவானது 134.24 சதுர கி.மீ பரப்பளவினை உள்ளடக்கியது. மேலும் 31கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

எல்லைகளாக,

வடக்கே- மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகம், தெற்கே முசலி–பிரதேச செயலகம், கிழக்கே- மடு,
மேற்கே- இந்து சமுத்திரம் என்பவற்றை கொண்டு விளங்குகின்றது.

தற்போதைய பிரதேச செயலாளர் திரு. சந்திரஐயா அவர்களின் தலைமையின் கீழ் செவ்வனே பணியாற்றி வரும் எமது செயலக பிரிவில் ஏறத்தாழ 6068 குடும்பங்களாக 21152 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் மீன்பிடித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

தொடர்புகட்கு..... பிரதேச செயலாளர், நானாட்டான். 02-33233491

 
செய்திகள்/நிகழ்வுகள்